காளையார்கோவில்: செம்பனூரில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் 800 க்கும் மேற்பட்ட காளைகளும் 300 க்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்பு.
சிவகங்கை மாவட்டம் செம்பனூரில் அரசு அனுமதியுடன் நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 800 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க 300க்கும் மேற்பட்ட காளையர்கள் களமிறங்கி விளையாடினர். வெற்றி பெற்ற காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் கட்டில், சேர், பிரோ, அண்டா, போன்ற பரிசு பொருட்களை பெற்றனர்,சில காளைகளுக்கு ஒரு ஏக்கர் நிலம், ரூ5 ஆயிரம் ரொக்கம் என அதிரடி பரிசுகளும் அறிவிக்கப்பட்டு போட்டி விருவிருப்பாக நடைபெற்றது.