திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பகல் நேரங்களில் மிதமான வெயில் மற்றும் பனி மூட்டம் நிலவி வருகிறது மாலை நேரங்களில் நீர் பனியுடன் கூடிய பனிச்சாரலும் விழ ஆரம்பித்துள்ளது. இதனால் மாலை நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. தற்பொழுது 10 டிகிரிக்கும் குறைவான தட்பவெட்ப நிலை உருவாகியுள்ள நிலையில் மேலும் குளிர் அதிகரிக்க கூடும் எனக் கூறப்படுகிறது. நட்சத்திர ஏரியில் கடும் குளிரிலும் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்தனர்.