திருவள்ளூர்: பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு 9500 கன அடி உபரி நீர் திறப்பு 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தொடர் மழையின் காரணமாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு நீர் வரத்து 8500 கன அடியிலிருந்து 10500 கன அடியாக அதிகரித்து வருகிறது,கொசஸ்தலை ஆற்றுக்கு உபரி நீர் வெளியேற்றம் மதியம் 7500 கன அடியாக இருந்தது இன்று மாலை அது 9500 கன அடியாக அதிகரிப்பு ,30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ துணி துவைக்கவோ செல்பி எடுத்து விளையாடவோ கூடாது என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவுறுத்தியுள்ளார்