வேடசந்தூர்: தனியார் பஸ் டிரைவர் தெனாவட்டாக பேசியதால் சுள்ளெரும்பில் பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்
வேடசந்தூரில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி தனியார் பஸ் சென்றது. பஸ்ஸில் ஏராளமான கூட்டம் இருந்ததால் படிக்கட்டு மற்றும் ஜன்னல் வழியாக ஏராளமானோர் தொங்கிக் கொண்டு சென்றனர். இதனைப் பார்த்த நடுப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆபத்தான நிலையில் பஸ்சை இயக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். அதற்கு தனியார் பஸ் டிரைவர் கீழே விழுந்து செத்தால் சாகட்டும் என்று தெனாவட்டாக கூறிவிட்டு சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த பகுதி மக்கள் தனியார் பஸ் மீண்டும் வரும்பொழுது சுள்ளெரும்பில் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.