திருவள்ளூர்: செவ்வாப்பேட்டை புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மர்மம் இருப்பதாக தாய் காவல் நிலையத்தில் புகார்,
திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை சி.டி.எச் ரோடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (37). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் உறவுக்கார பெண்ணான புல்லரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (25) என்பருக்கும் கடந்த 4.9.2025 அன்று திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திருமணம் ஆன 20 வது நாளில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், மகன் சாவில் மர்மம் இருப்பதால் தாய் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்,,