அரியலூர்: கோடை வெயில் தாக்கத்திலிருந்து தற்காத்து கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆட்சியர் அறிவிப்பு.
அரியலூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் வெப்பம், வழக்கத்தைவிட அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் உடலின் நீர்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான தண்ணீர், எலுமிச்சை சாறு, பழச்சாறு அருந்துமாறு அறிவுறுத்தபட்டுள்ளது. மேலும் நண்பகல் 12 மணிமுதல் 03 மணிவரை வீட்டைவிட்டு வெளியில் செல்வதை தவிர்கலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை கலெக்டர் தெரிவித்துள்ளார்.