உடையார்பாளையம்: ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைபள்ளியில் பணியில் இருந்த ஆயுதபடை காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு
அரியலூர் மாவட்டம் ஜெமீன்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் லீன்குமார். வயது-28இவர் அரியலூர் மாவட்ட ஆயுதபடையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று காலை ஆயுதபடை காவலர்களுடன் பத்தாம் வகுப்பு பொதுதேர்வின் வினாத்தாள் பாதுகாப்பிற்காக ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைபள்ளியில் பணிக்கு சென்றுள்ளார். அப்போது லீன்குமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிர் இழந்தார் .