திருப்பூர் தெற்கு: கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு ஒதுக்க கோரி நாட்டுப்புற கலைஞர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாத்தியங்களுடன் வந்து மனு அளித்தனர்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பாக, கோரிக்கை மனு அளிக்க வந்தனர். மனு வழங்க வந்திருந்த கலைஞர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தவில் மற்றும் நாதஸ்வரங்களை வாசித்து, கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.