நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே மருமகனை வெட்டி கொலை செய்த வழக்கில் மாமியார், மைத்துனர் கைது
நிலக்கோட்டையை அடுத்த கூட்டாத்து அய்யம்பாளையத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து மகளை திருமணம் செய்த மருமகன் ராமச்சந்திரனை மாமனார் சந்திரன் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் மாமனார் சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சமூக வலைத்தளத்தில் மைத்துனர் ரிவின் பேசிய ஆடியோ வெளியான நிலையில் கொலை சம்பவத்தில் தொடர்புடைய மாமியார் அன்புச்செல்வி, மைத்துனர் ரிவின் ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்