நாகப்பட்டினம்: அரசு ஊழியர் சங்க கட்டிட முன்பு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பில் 10 அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி உண்ணாவிரதம்
ஜாக்டோஜியோ கூட்டமைப்பின் சார்பில் நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்க கட்டிடம் முன்பு உரிமை மீட்பு உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீதர், ரவி, சரவணன், முத்துச்சாமி ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அற்புதராஜ்ரூஸ்வெல்ட் வரவேற்றார். தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக பொதுச்செயலாளர் குமரசேன் தொடங்கி வைத்தார். 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம்1ம் தேதிக்கு பின்னர் அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்