நிலக்கோட்டை: சிலுக்குவார்பட்டியில் கடும் விலை வீழ்ச்சியால் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள தக்காளி
தமிழக முழுவதுமே தக்காளி வரத்து அதிகரித்துளதால் வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, கொடைரோடு பகுதிகளில் நாட்டு தக்காளி விலை கடுமையான விலை சரிவை சந்தித்து கிலோ 10, 15 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. ஆந்திரா உள்ளிட்ட வட மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் ஒட்டு ரக தக்காளி கிலோ ரூபாய் 25 வரை யும் ஒரு பெட்டி தக்காளி ரூபாய் 200 வரை விற்பனை போதிய விலை கிடைக்காமல் மிகுந்த நஷ்டத்தை சந்தித்ததாக கூறி, தக்காளியை சிலுக்குவார்பட்டி அருகே சாலை ஓரத்தில் கொட்டி சென்றனர்.