திருவொற்றியூர்: எர்ணாவூர் விம்கோ நகர் பகுதியில் 56 சி பேருந்தில் தொங்கி வந்த மாணவர்களை கண்டித்து அனுப்பிய காவல்துறை உதவி ஆய்வாளர்.
சென்னை பாரிமுனையில் இருந்து ஜோதி நகர் நோக்கி சென்ற அரசு பேருந்து தடங்கல் 56 சி விம்கோ நகர் தாண்டி வந்து கொண்டிருந்தபோது அதில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் பேருந்து படியில் தொங்கியபடி பயணித்தனர். அப்போது காவல் பணியில் இருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் காமராஜ் மற்றும் காவலர் ஸ்ரீதர் ஆகியோர் படிக்கட்டில் தொங்கிய மாணவர்களுக்கு படிக்கட்டு பயணத்தின் ஆபத்து குறித்து எடுத்துரைத்து அறிவுரை வழங்கினர்.