விருத்தாசலம்: விருத்தகிரிஸ்வரர் ஆலயத்தில் மாசி மக 6ஆம் நாள் திருவிழா, விபசித்து முனிவருக்கு பழமலைநாதர் காட்சியளிக்கும் ஐதீக திருவிழா
விருத்தாசலம் விருத்தகிரிஸ்வரர் ஆலய மாசிமக ஆறாம் நாள் திருவிழாவில் கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு பழமலைநாதர் காட்சியளிக்கும் ஐதீக திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர், அதன்பின்னர் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.