திண்டுக்கல் மேற்கு: கும்பாபிஷேக விழா பொது மைதானத்தில் அன்னதானம் நடத்த அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலை மறியல்
பஞ்சம்பட்டி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு அரசு வழங்கிய அடையாள அட்டைகளை ஒப்படைப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். பின்னர் நுழைவாயில் முன்பு மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர் கோரிக்கையை நிறைவேற்றி தர உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை போராட்டம் கைவிடப்பட்டது