வேடசந்தூர் அருகே உள்ள தட்டாரபட்டியைச் சேர்ந்த இளைஞர் சுந்தர்ராஜ் வயது 20 தொழிலாளி. இவர் வேடசந்தூர் வடமதுரை ரோட்டில் தட்டாரப்பட்டி பிரிவு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரது பின்னால் வந்த திருச்சியை சேர்ந்த கணேசன் என்பவர் பழனியை நோக்கி ஓட்டிச் சென்ற கார் மோதியது. இதில் இளைஞர் சுந்தரராஜின் கால் எலும்புகள் சுக்கு நூறாக உடைந்தது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.