திண்டுக்கல் மேற்கு: ஆட்சியர் அலுவலகம் அருகே புவியியல் சுரங்கத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
திண்டுக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனராக செல்வசேகர் 2024ம் ஆண்டு முதல் திண்டுக்கல்லில் பணிபுரிந்து வருகிறார். இதற்காக கலெக்டர் அலுவலகம் அருகே ஏழுமலையான் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். குடும்பத்தினர் சொந்த ஊரான திருநெல்வேலியில் உள்ளனர். இந்நிலையில், செல்வசேகர் வீட்டிற்கு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது