நத்தம்: அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி அருகே தக்காளி ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து - சாலையில் சிதறிய தக்காளிகள்
திண்டுக்கல், நத்தம்ரோடு, கொசவபட்டி புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி அருகே தக்காளி ஏற்றி வந்த வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இதனால் வாகனத்தில் இருந்த தக்காளிகள் அனைத்தும் சாலையில் சிதறின. வேனில் வந்தவர்கள் சிறு காயத்துடன் உயிர்தப்பினர்.