ஆத்தூர்: செம்பட்டி ஆட்டுச்சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆட்டு கிடா, விலை உயர்வு. கொட்டும் மழையிலும் ரூபாய் 2 கோடி வரை வியாபாரம்
Attur, Dindigul | Oct 17, 2025 திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலை ஆடுகள் விற்பனை செய்யும் வாரச்சந்தை நடைபெறுகிறது. தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற செம்பட்டி ஆட்டுச் சந்தை இன்று வெள்ளிக்கிழமை காலை கூடியது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஆடு கெடா விற்பனைக்காக கொண்டுவரப்பட்டது.