திண்டுக்கல் மேற்கு: ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்பு துறையினரின் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நடைபெற்றது
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீயணைப்பு துறையினரின் பேரிடர் மேலாண்மை ஒத்திகை மாவட்ட ஆட்சியர் சரவணன் முன்னிலையில் மாவட்ட தீயணைப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலர் விவேகானந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஒத்திகையில், மழைக்காலங்களில் சாலையின் குறுக்கே விழும் மரங்கள், இடிந்து விழும் சுவர்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்துவது, தீயணைப்புத்துறையினரின், 50க்கும் மேற்பட்ட தளவாட பொருட்கள் கொண்டு மீட்பு ஒத்திகை நடைபெற்றது