உடையார்பாளையம்: மீன்சுருட்டி கடைவீதியில் நகை வாங்குவது போல் நடித்து பட்டபகலில் 10 பவுன் தங்க செயின் திருடி சென்ற 2 பேர் கைது
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி கடைவீதியில் ஶ்ரீ சக்தி ஜுவல்லரி எனும் பெயரில் நகைகடை இயங்கி வருகிறது. இந்த கடைக்கு காரில் சென்ற 2 மர்மநபர்கள் 10 பவுன் தங்க செயினை எடுத்து கொண்டு, தயார் நிலையில் இருந்த காரில் ஏறி தப்பி ஓடியுள்ளனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன், சென்னை திருவிக நகரை சேர்ந்த ராமகிருஷ்ணனை போலீசார் இன்று கைது செய்தனர்.