காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆதிசேஷ வாகனத்தில் வீதி உலா வந்த குஞ்சுமணி கண்ணனை திரளான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம்
கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதன்படி வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள குஞ்சுமணி ஸ்ரீ கண்ணனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, பஞ்சவர்ண பட்டு உடுத்தி, செண்பகப்பூ, மல்லிகை பூ, துளசி மலர் மாலைகள், அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் ஆதிசேஷ வாகனத்தில் எழுந்தருளச் செய்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.