கள்ளக்குறிச்சி: கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக சுமார் 440 பேர் நேரில் ஆஜராகினார்
கனியாமூர் பள்ளி கலவர வழக்கு தொடர்பாக 615 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் இன்று ஒரே நேரத்தில் சுமார் 440 பேர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நிலையில் இந்த வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ரீனா உத்தரவிட்டுள்ளார்.