பொன்னேரி: ஆண்டார்மடத்தில் அனுமதியின்றி செயல்பட்ட  தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சீல் வைத்த அதிகாரிகள்,
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த ஆண்டார்மடம் கிராமத்தில்  அனுமதியின்றி தனியார் மெட்ரிக் பள்ளி இயங்கி வந்தது. இந்நிலையில் அத்தகைய பள்ளியை இன்று காலை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர் அங்கு பயின்ற மாணவர்கள் வேறு ஒரு தனியார் பள்ளியில் சேர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்