அரியலூர்: கட்டாய மின்- தாக்கல் முறையை உரிய கால அவகாசம் கொடுத்து தள்ளிவைக்ககோரி மாவட்ட வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு
அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம், செந்துறை நீதிமன்றங்களில் பணிபுரியும் வழக்கறிஞர்கள் இன்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதில் நீதிமன்றங்களில் நடைமுறைப்படுத்தபடும் கட்டாய மின்-தாக்கல் முறையை உரிய கால அவகாசம் கொடுத்து தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தபட்டது.