சாத்தான்குளம்: பழனியப்பபுரம் புனித வேளாங்கண்ணி மாதா வளாகத்தில் வேப்ப மரத்தில் இருந்து பால் வடிந்ததால் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பழனியப்பபுரம் புனித வேளாங்கண்ணி மாதா ஆலய வளாகத்தில் உள்ள வேப்பமரத்திலிருந்து திடீரென பால் வடியும் நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் இறை மக்கள் பகுதிக்கு வந்து இந்த அதிசய நிகழ்வைக் கண்டு வியந்தனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.