திருப்பூர் தெற்கு: சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கு தனிச்சட்டம் ஏற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர்கள் மனு அளித்தனர்
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியில் சாலை வசதி குறித்து கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலர்கள் பேரூராட்சி தலைவரால் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு வழங்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்