எழும்பூர்: சென்னை சேத்துப்பட்டு சிக்னல் ஈகா தியேட்டர் அருகே டேங்கர் லாரி மோதி காரில் வந்தவர் ஒருவர் பலி இருவர் படுகாயம் மோதிய லாரி டிரைவர் கைது செய்து விசாரணை
சென்னை பட்டாளம் கார்ப்பரேஷன் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் (33), விஜய் (28), நண்பர் கிஷோர் (28) ஆகியோர் இன்று அதிகாலை வானகரம் மீன் கடைக்கு காரில் சென்றனர். அப்போது சேத்துப்பட்டு சிக்னல் ஈகா தியேட்டர் அருகே டேங்கர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. மூவரும் படுகாயமடைந்த நிலையில் விஜய் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். லாரி ஓட்டுனர் சங்கர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.