திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே வாலிபர் ஒருவர் குடிபோதையில் சூரி கத்தி காட்டி அப்பகுதியில் செல்பவர்களை மிரட்டிக் கொண்டிருந்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்த சூரி கத்தியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்ட போது அவர் பொன்னிமாந்துரை புதுப்பட்டியை சேர்ந்த சகாயராஜ் என்பது தெரிய வந்தது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்