திருவையாறு: அதிகாலையில் ஏற்பட்ட அதிர்ச்சி ... பற்றி எரிந்தது ஜவுளி கடை : திருவையாறு தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர்
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் இன்று அதிகாலை பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியதை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர். உடன் அவர்கள் திருவையாறு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் வெகு நேரம் போராடி தீயே அணைத்தனர். இதில் ஏராளமான ஜவுளி துணிகள் எரிந்து சேதமடைந்தது என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து திருவையாறு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.