திண்டுக்கல் நகர் பகுதியில் தொடர்ச்சியாக இரு சக்கர வாகனங்கள் திருட்டு சம்பவம் நடைபெற்றது. தனிப்படை போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர் அதன்படி மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட வேடபட்டி நெசவாளர் காலனியை சேர்ந்த ஈஸ்வரன் (35), தினேஷ்குமார் (21) மற்றும் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 17 வயது மற்றும் 13 வயது சிறுவர்கள் 2 உட்பட என 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.