நத்தம் செட்டியாகுளம் தெருவை சேர்ந்த நந்தகோபால் திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முருகேஸ்வரி நத்தம் செட்டியாகுளத்தெருவில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். 3 தினங்களுக்கு முன்பு கரூர் அருகே ஈசநத்தத்திற்கு தனது இரு குழந்தைகளுடன் சென்றுள்ளார். இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கட்டும் வீட்டின் பீரோவை திறந்து 23 ஆயிரம் பணம் வெள்ளி கொலுசுகள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது