சூளகிரி: உலகம் கிராமத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி எடுத்து உலகம் என்னும் கிராமத்தில் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி அன்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் ரவிசங்கர் ஓடு ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டார்.. இந்த வழக்கில் இரண்டு இளைஞர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அவர்களின் பரிந்துரையின் பெயரில் கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ் குமார் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறைப்படுத்த உத்தரவிட்டார்