நிலக்கோட்டை: வத்தலகுண்டு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கட்டகாமன்பட்டி சுடுகாடு அருகே கஞ்சா விற்பனை செய்த கட்டகாமன்பட்டியை சேர்ந்த கதிரவன் மகன் பகவத், பூமிநாதன் மகன் பாண்டித்துரை ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்