திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியை சேர்ந்த வடக்கு ரங்கநாதபுரம், ஓடையூர், சி டி ஓ காலனி, கோவிந்தராஜ் நகர், மாசிலாமணிபுரம், ஏ டி காலனி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக குடிதண்ணீர் வழங்கவில்லை, சாக்கடை வசதி சரிவர செய்து தரவில்லை, சுகாதாரமின்றி வாழ்ந்து வருகிறோம் என்று கூறி, காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்தும், படுத்தும் கடந்த அரை மணி நேரத்திற்கு மேலாக மறியல் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.