கோவை தெற்கு: காந்திபுரம் பகுதியில் திமுக சார்பில் அண்ணாவின் 117-வது பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 117-ம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழகச் செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் மலர் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.