வேடசந்தூர்: வேங்கனூரில் சரக்கு வாகனம் மோதி மின்கம்பம் உடைந்தது
வேடசந்தூர் தாலுகா அய்யலூர் வேங்கனூர் பகுதியில் தப்புசாமி கடை உள்ளது. இதன் அருகில் மின்கம்பம் நடப்பட்டு, அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கோயம்புத்தூரில் இருந்து வையம்பட்டி நோக்கி சென்ற சரக்கு வேன் அந்த மின்கம்பத்தின் மீது மோதி, அருகில் இருந்த கடைக்குள் புகுந்தது. இதில் கடை சேதமடைந்ததுடன் மின்கம்பமும் முறிந்து விழுந்தது. இதனால் மின்வயர்கள் துண்டிக்கப்பட்டு அப்பகுதிக்கு மின் விநியோகம் தடைப்பட்டது. அதிர்ஷ்டவசமாக விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.