திண்டுக்கல் கிழக்கு: பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பேக்கரி கடைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேக்கரி மற்றும் ஒட்டல்களில் இனிப்பு, கார வகைகள் தயாரித்து விற்கும் தயாரிப்பாளர்கள், தரமான மூலப்பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுகாதாரமான முறையில் உணவு பண்டங்கள் மற்றும் தின் பண்டங்கள் தயாரிக்க வேண்டும். இனிப்பு வகைகளுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக நிறமி சேர்க்க கூடாது. தொடர்ந்து திண்டுக்கல் நகர் பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.