காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட காந்திநகர் பகுதியில் காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் நெடுஞ்சாலையில் 150 ஆண்டுகால புளிய மரம் ஒன்று இருந்தது கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக மற்றும் பழமையான புளியமரம் என்பதால் வலு விழுந்து இன்று 2 மணி அளவில் சாலையில் விழுந்தது அதிர்ஷ்டவசமாக அவ்வழியாக யாரும் அப்பொழுது செல்லாததால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதனை அடுத்து காஞ்சிபுரம் இருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.