கிராமத்தில் வசிக்கும் பெண்கள் நாள்தோறும் வீட்டு வேலைகள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது விவசாயத் தோட்டத்து வேலை என தொடர்ந்து வேலை செய்து கொண்டு கடும் உழைப்பாளிகள் ஆகவே இருந்து வருகின்றனர். இவர்களுக்கு ஊரில் விசேஷம் கோவில் திருவிழா போன்ற சமயங்களில் மட்டுமே தனது ஊர்காரர்களுடன் இணைந்து கும்மியடித்து ஆட்டம் ஆடுவது ஒரு மகிழ்ச்சியான பொழுதுபோக்காக இருந்து வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் ஜி நடுப்பட்டி கிராம பெண்கள் கும்மி நடனம் ஆடுவதற்கு கிராம பொதுமக்களின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.