திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே நொச்சிலி அருகே உள்ள காப்பு காட்டில் மான் மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளது. அவ்வப்போது காப்புக்காட்டில் இருந்து தண்ணீர் குடிக்க வெளியே வரும்போது சாலையில் செல்லும் வாகனங்களில் சிக்கி விபத்து ஏற்பட்டு உயிரிழந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை காப்புக் காட்டில் இருந்து மயில் பறந்து சென்ற போது அப்போது சாலை ஓரமாக இருந்த உயர் அழுத்த மின்கம்பியின் மீது சிக்கி மின்சாரம் பாய்ந்து துடித்து துடித்து சம்பவ இடத்தில் உயிரிழந்தது.