ஆத்தூர்: காருக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? என, விசாரணை சித்தையன் கோட்டையில் பரபரப்பு
Attur, Dindigul | Sep 16, 2025 சித்தையன்கோட்டையை சேர்ந்த சகோதரர்கள் அப்துல்லா, சபிபுல்லா, இந்தாதுல்லா, பரக்கத்துல்லா , ஆகிய 4 பேரும் டீக்கடை நடத்தி வருகின்றனர். வீட்டு முன்பு, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பரக்கத்துல்லாவின் மாருதி சிப்ட் கார், அதிகாலை இரண்டு மணிக்கு கார் தீ பிடித்து எரிந்த போது, அதன் டயர்கள் வெடிக்கும் சத்தம் கேட்டு பார்த்தபோது கார் எரிந்து கொண்டிருந்ததால் அவர்களாகவே தீயை அணைத்துள்ளனர். இதுகுறித்து, செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்