திண்டுக்கல் கிழக்கு: அரசு மருத்துவமனை பிணவரையை முற்றுகையிட்டு பிரேத பரிசோதனை இன்றி உடலை வழங்க உறவினர்கள் கோரிக்கை
அய்யன்குளத்தை சேர்ந்த சந்தானகுமார்(50) இவர் உடல் நல கோளாறு காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார் வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டது இதை அடுத்து பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர் தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இயற்கை மரணம் தான் உடற்கூறு ஆய்வு செய்யாமல் உடலை கேட்டு உடற்கூறு ஆய்வுக்கூடம் முற்றுகையிட்டனர்