நாகப்பட்டினம்: அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தற்காலிக ஓட்டுநர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
நாகை பால்பண்ணிச்சேரியைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 45). இவர் வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக பஸ் டிரைவராக 5 நாட்கள் பணியாற்றினார். இதற்காக அவர் தனது ஓட்டுநர் உரிமத்தை போக்குவரத்து கழகத்தில் ஒப்படைத்திருத்தார். திருவிழா முடிந்ததும் அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் ஓட்டுநர் உரிமம் மீண்டும் அவருக்கு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் ஓட்டுநர் உரிமம் தனக்கு வழங்காமல் அலைக்கழிப்பதாகவும், இதனால் மாற்று டிரைவர் பணிக்கு செல்ல ம