வேடசந்தூர் அருகே உள்ள ஜி நடுபட்டியில் பெண்களுக்கான கும்மி நடன பயிற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெண்கள் தங்களது குடும்பம், வீட்டு வேலை, தொழில், விவசாயம், பள்ளி கல்லூரி படிப்பு ஆகியவற்றில் பிஸியாக இருந்தாலும் அவர்களுக்கு என்று நாள்தோறும் இரவு நேரத்தில் கும்மி நடன பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அனைத்து பெண்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் புதன்கிழமை இரவு ஏழு முப்பது மணி முதல் 9 மணி வரை நடைபெற்ற பயிற்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.