கொடைக்கானல்: உலக ரேபீஸ் தினத்தை முன்னிட்டு பூங்காவில் இருந்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சியில் உலக ரேபீஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். உலக ரேபீஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 28-ஆம் தேதி உலகளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, இந்தாண்டு கொடைக்கானல் பகுதியில் விழிப்புணர்வு பேரணி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.