அரியலூர்: சிறுத்தை நடமாட்டம் எதிரொலி; பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கபடும் என ஆட்சியரகம் அறிவிப்பு
அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு மருத்துவமனை பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை அங்கிருந்த சிசிடிவி கேமராவின் காட்சிகள் மூலம் உறுதிபடுத்தபட்டது. இந்நிலையில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணிகள் தீவிரபடுத்தபட்டு உள்ளதாகவும், எனவே செந்துறை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராமமக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்ல வேண்டாம் எனவும், கால்நடைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ளுமாறு கலெக்டர் அலுவலகம் தரப்பில் தகவல் தரப்பட்டுள்ளது.