காரைக்குடி: காரைக்குடியில் முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டு போட்டி: வெற்றியாளர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கிய அமைச்சர்
காரைக்குடியில் முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி முன்னிலையில் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.பள்ளி,கல்லூரி,பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள்,அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. முதல்,2, 3பரிசுகளாக ரூ.3000, ரூ.2000, ரூ.1000 வழங்கப்பட்டன.கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன்,விளையாட்டில் பங்கேற்பது திறன்களை வெளிப்படுத்த உதவும் என கூறினார்