ஒட்டன்சத்திரம்: அரசபிள்ளைபட்டி கிராமத்தில் ரூ.9.45 கோடி மதிப்பீட்டில் நங்காஞ்சியாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, ஒட்டன்சத்திரம் வட்டம், அரசபிள்ளைபட்டி கிராமத்தில் ரூ.9.45 கோடி மதிப்பீட்டில் நங்காஞ்சியாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், செயற் பொறியாளர் பொதுப்பணித்துறை (நீர்வளத்துறை) பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபு பாண்டியன், காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.