சிங்கம்புனரி: எஸ்.புதூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை மின்தடை-மின்வாரியம் தகவல்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட எஸ்.புதூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை எஸ்.புதூர், மேலவண்ணாரிருப்பு, புழுதிபட்டி, கட்டுக்குடிப்பட்டி, முசுண்டப்பட்டி, உலகம்பட்டி, குளத்துப்பட்டி, வார்பட்டு, கருப்பக்குடிபட்டி, கீழக்குறிச்சிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் ஜான் எஃப் கென்னடி தெரிவித்தார்.