திருவொற்றியூர்: திருவொற்றியூரில் தனியார் கம்பெனியில் இருந்து வெளியேற்றும் மழை நீர் பொதுமக்கள் வசிக்கும் இடத்தில் கலப்பதால் கம்பெனியை முற்றுகையிட்டு போராட்டம்.
திருவொற்றியூர் மண்டலம் 7வது வட்டம் வெற்றி விநாயகர் நகரில் 300 வீடுகள் குடி இருந்து வருகின்றனர் இந்த நகருக்கு பின்னால் கேசிபி என்ற தனியார் நிறுவனம் உள்ளது இந்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் மழை நீர் கால்வாயில் வெற்றி விநாயகர் நகரில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது கலக்கப்படுகிறது இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 7வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் உடன் தனியார் கம்பெனியிலிருந்து வெளிவரும் மழை நீரை குடியிருப்புகள் உள்ளே விடுவதை கண்டித்து முற்றுகையிட்டனர்